ட்ரம்ப்பின் மூத்த மகனுக்கு கொரோனா!

ட்ரம்ப்பின் மூத்த மகனுக்கு
கொரோனா!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின்
மூத்த மகன் டொனால்ட் ட்ரம்ப்
ஜூனியர்(42) கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா
இருப்பது தெரியவந்ததையடுத்து,
மருத்துவர்கள் கூறிய ஆலோசனைப்படி,
அனைத்து வழிமுறைகளையும்
கடைபிடித்து தனிமையில் இருந்து
வருகிறார்.

முன்னதாக ட்ரம்ப் மற்றும்
அவரது மனைவி மெலனியா ட்ரம்ப்,
இளைய மகன் பாரன் ஆகியோர்
தொற்று பாதிக்கப்பட்டு பின்னர் குணம்
அடைந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

BIGNEWS: நாளை மறுநாள்
முதல் மீண்டும் – மக்கள் தயாராக
உத்தரவு

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
உருவாகவுள்ள நிலையில் தமிழகத்தில்
நாளை மறுநாள் முதல் மீண்டும் மிக
கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக
சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக்
கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு
பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு
மண்டலமாக மாறும் நவ.23 முதல் மிக
கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால்
மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி
எச்சரித்துள்ளது.

தமிழ் சினிமா பிரபலம் செய்த
காரியம், ஒருவர் மரணம்! –
பரபரப்பு…

புதுக்கோட்டை திருமயத்தில்
கவிஞர் சிநேகன் கார் மோதி காயம்
அடைந்த அருண்பாண்டி என்பவர்
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்தார்.
கடந்த 15-ஆம் தேதி
சாவேரியார்புரத்தில் சிநேகன் ஒட்டிச்
சென்ற கார் அருண்பாண்டி மீது
மோதியதால் காயமடைந்த அவர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
நிலையில், இன்று அவர் உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *