BREAKING ஸ்டாலினுடன் மோதல் திமுக முக்கிய பிரபலம் அமிட்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் !!

உள்துறை அமைச்சர் அமிட்ஷா வருகை தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு முதல் அரசு முறை பயணமாகவும், உட்கட்சி நிலவரங்கள் குறித்தும் ஆராயவும் கூட்டணி குறித்த ஒப்பந்தங்களை இறுதி செய்யவும் உள்துறை அமைச்சர் அமிட்ஷா இன்று சென்னை வருகிறார்.

சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள அவரை பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின அதோடு சேர்த்து திமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் பாஜகவில் இணைவார்கள் என்ற செய்தியும் வெளியானது.

இந்த நிலையில் ஸ்டாலினுடன் கொரோனா பரவல் போது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது தவறு என கூறி மோதலில் ஈடுபட்ட கே பி ராமலிங்கம் இன்று உள்துறை அமைச்சர் அமிட்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் அவருடன் பல திமுக பிரமுகர்கள் இணையலாம் என்ற தகவலால் தற்போது அறிவாலயம் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

தொடர்ந்து திமுக அதிமுக என கட்சி மாறுபவர்கள் இப்போது பாஜகவை நோக்கி செல்வது தமிழகத்தில் பாஜக மாற்று சக்தியாக மாறிவருவதை காட்டுகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள், கே பி ராமலிங்கம் தவிர்த்து தற்போதைய திமுக முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் யார் யார் இணைகிறார்கள் இன்னும் என்னென்ன அரசியல் சந்திப்புகள் நடக்க இருக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும் என்கிறார் அரசியல் விமர்சகர் கிருஷ்ணகுமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *