தமிழகத்தில் கொரோனாவுடன் சேர்த்து அடுத்த ஆபத்து – அரசு பகீர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனாவுடன் சேர்த்து
டெங்கு காய்ச்சலும் பரவுவதாக
சுகாதாரத்துறை அதிகாரிகள்
எச்சரித்துள்ளனர். வடக்கிழக்கு பருவமழை
தொடங்கவுள்ள நிலையில் டெங்கு
பரவ தொடங்கியிருக்கிறது.

மலேரியா,
சிக்குன்குனியா பரவவும் வாய்ப்புள்ளது.
பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, உடல்
வலி இருந்தால் கொரோனாவுடன் டெங்கு
பரிசோதனையும் கட்டாயம் செய்ய
வேண்டும் என கூறியுள்ளது.

இனிமேல் விலை உயர்வுதான் !!!

உயரும் பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் கடந்த 59 நாளாக
மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட
பெட்ரோல், டீசல் விலை இன்று
அதிகரித்துள்ளது.

எண்ணெய்நிறுவனங்களின் அறிவிப்பின்படி, நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல்
விலை லிட்டருக்கு 17 காசுகள் உயர்ந்து ரூ.
84.31 ஆகவும், டீசல் விலை 22 காசுகள்
அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.17 ஆகவும்
விற்கப்படுகிறது. இந்த விலை மாற்றம்
காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Credit, Debit Card-ல் கடன்
இருக்கா? – அதிர்ச்சி அறிவிப்பு….

மத்திய அரசு அறிவித்த கடன்
தவணைக்கான வட்டிக்கு வட்டி
தள்ளுபடி சலுகை கிரெடிட் கார்டுகளுக்கு
பொருந்தாது என உச்சநீதிமன்றம் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.

கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்துவோரை
நுகர்வோர் கடன் வகைகளில் சேர்க்க
முடியாது. மேலும் மின் உற்பத்தியாளர்
கேட்கும் சலுகைகளுக்கு மத்திய அரசும்,
ரிசர்வ் வங்கியும் எழுத்துப்பூர்வமாக
பதிலளிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *