20-20 ஆண்டின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த பாஜக இது வேற லெவல் !!!

மத்திய பாஜக தலைமையிலான அரசு எப்போதும் அதிரடிக்கு பெயர் போனது அது வாஜ்பாய் தலைமையிலான அரசனாலும் சரி, மோடி தலைமையிலான அரசனாலும் சரி காங்கிரஸ் செய்ய துணிந்த பல காரியங்களை பாஜக சத்தமில்லாமல் செய்து வந்துள்ளது. வாஜ்பாய் ஆட்சி காலத்தில் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து அடித்து காஷ்மீரை மீட்டது.

அது வாஜ்பாய் வரலாறு என்றால் மோடி தாளமயிலான பாஜக அரசு, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், NIA சட்ட திருத்தம், CAA, தனி மனிதர்களையும் தீவிரவாத இயக்கமாக கருதலாம் என பல்வேறு சட்டதிருத்தங்களை நிறைவேற்றி தாங்கள் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா பெரும் தொற்று இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவாக கொரோனா மீட்பு, பொருளாதார மீட்பு ஆகிய நடவடிக்கையில் கவனத்தை செலுத்திய மத்திய அரசு தற்போது இந்திய பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்த முறை மத்திய அரசு செய்த நடவடிக்கை ஒட்டு மொத்த நாட்டிலும் மிக பெரிய மாற்றத்தை உண்டாக்க போகிறது, வெளிநாட்டில் இருந்து நிதி பெரும் நிறுவனங்கள், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட கூடாது, அதே விதி மாணவர்கள் அமைப்பு உள்ளிட்டவற்றிற்கும் பொருந்தும், இந்த சட்டம் கொண்டுவந்தது சாதாரணமாக தெரியலாம் ஆனால் அதன் தாக்கம் தூத்துக்குடியில் கூட எதிரொலிக்கிறது.

தமிழகத்தில் கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் போராட்டங்கள் நடைபெறுகின்றன, இந்த போராட்டங்களில் பாதிரியார்கள் முதல் பல NGO அமைப்புகள் வரை கலந்து கொண்டு மத்திய அரசை விமர்சனம் செய்ததை பார்த்திருக்கலாம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டமும், குளைச்சல் துறைமுகம் எதிர்ப்பு போராட்டமும் அதற்கு சான்று.

தற்போதைய புதிய சட்டத்தின் படி இதுபோன்ற போராட்டங்களில் வெளிநாட்டின் இருந்து நிதி பெரும் எந்த அமைப்பும் ஈடுபட முடியாது, குறிப்பாக அவர்கள் அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டால் இனி வெளிநாடுகளில் இருந்து நிதி பெற முடியாது, NGO அமைப்புகள் டெல்லியில் உள்ள வங்கி ஓன்றில் இருந்து மட்டுமே நிதி பெரும் வகையில் அந்த சட்டத்திலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் பணத்தை வைத்துதான் உள்நாட்டில் அரசிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகின்றன எனவும், அத்துடன் பல NGO அமைப்புகள் இங்கு போராட்டதிற்கு துணை போவது மட்டுமல்லாமல் மத மாற்றங்களிலும் ஈடுபடுவதாக பல ஆண்டுகளாக குற்றசாட்டு எழுந்த நிலையில் கிளைகளை வெட்டாமல் நேரடியாக ஆணிவேரை வெட்டியுள்ளது மத்திய அரசு.

இந்த சட்டம் எதிரொலியாக 2025- ம் ஆண்டிற்குள் இந்தியாவில் மத மாற்றமும், அரசிற்கு எதிரான போராட்டங்களும் 95% அளவிற்கு குறையும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இனி மத்திய அரசு மதமாற்ற தடை சட்டம் கொண்டுவந்தாலும் அதை எதிர்த்து நாட்டில் உள்ள NGO 95% அமைப்புகள் போரட்டம் நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

பணம் தான் அனைத்திற்கு காரணம் என அறிந்த அரசாங்கம் 20-20 ம் ஆண்டில் கடைசி கட்டத்தில் கடைசி பந்தில் சிக்ஸர் நடித்துள்ளதாக இந்திய வரலாறு அரசியல் குறித்து ஆய்வு கட்டுரைகளை எழுதிவரும் பிரகாஷ் கட்டர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *