#BREAKING அரசியல் பிரவேசம் குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் அழகிரி !! திமுகவினர் அதிர்ச்சி !!

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி பாஜக அல்லது ரஜினி கட்சியில் இணைவார் என்ற செய்திகளும் அதே நேரத்தில் அவரது மகனை மீண்டும் திமுகவில் இணைத்துவிட்டு அரசியலில் இருந்து விலகுவார் என பல்வேறு தகவல்கள் ஊடகங்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பரவிய வண்ணம் இருந்தன அதற்கு இன்று அழகிரி முற்று புள்ளி வைத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அழகிரி தற்போது கொரோனா தொற்று காரணமாக என்னுடைய ஆதரவாளர்களைச் சந்திக்கவில்லை. என்னுடைய ஆதரவாளர்கள் என்னிடம்தான் உள்ளனர். அவர்கள் அனைவரும் நன்றாக உள்ளனர். தற்போது திமுகவில் புகைச்சல் அதிகமாகிவிட்டது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு திமுகவின் நிலையை நீங்களே அறிந்துகொள்வீர்கள்.

அதை தற்போதே என்னால் கூற முடியாது. நான் ஜோதிடன் கிடையாது. தற்போது திமுகவில் உள்ள சிலர் பதவிக்காகவே இருக்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகு அந்த நிலைமையை நீங்களே பார்க்கப் போகிறீர்கள். கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது.” என்று மு.க. அழகிரி தெரிவித்தார்.

 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்காவது ஆதரவு அளிப்பதா அல்லது புதிய கட்சி தொடங்குவதா என்பது குறித்து எனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து பிறகே அது குறித்த முடிவை தெரிவிப்பேன். என்று அதிரடியாக தெரிவித்துள்ளார், அதாவது திமுக எதிர்ப்பு என்ற விஷயத்தில் அழகிரி முழு மூச்சாக இறங்கி இருப்பது உறுதியாகியுள்ளது.

அழகிரியின் கருத்தால் திமுகவினர் மத்தியில் சற்று கலக்கம் உண்டாகியுள்ளது, உதயநிதி வருகையால் திமுகவில் புறக்கணிக்கப்படும் மூத்த உறுப்பினர்கள் அவர்களது ஆதரவாளர்கள் அழகிரி பக்கம் சொல்வார்களோ என்ற பதற்றம் திமுகவினருக்கு உண்டாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *