இந்த நடிகருக்கா இப்படி ஒரு நிலைமை? உதவுவார்களா ஹீரோக்கள்?

தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை நடிகராக வலம் வந்தவர் நடிகர் மீசை தவசி. இவரது மீசையைப் பார்த்து கட்டப் பஞ்சாயத்து பேசுவதற்கு அழைத்த நடிகர்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர் என்றே கூறலாம். ஆம், ரஜினி முருகன் படத்தில், மீசை தவசியை தங்களுக்கு ஆதரவாக பஞ்சாயத்து பேசுவதற்கு அழைத்து சென்று பஞ்சாயத்து பேசியுள்ளனர்.

மேலும், சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், சூரிக்கு அப்பாவாக நடித்துள்ளார். அந்தப் படத்தில், கருப்பன்… குசும்புக்காரன்…என்று வரும் டயலாக்கை பேசி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர் விபத்தில் சிக்கி பல நாட்களுக்கு பிறகு மீண்டார்.

ஆனால் தற்போது இவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும், சிகிச்சைக்கு பணம் இல்லாத நிலையில் இருப்பதால் இவருக்கு நடிகர்கள் உதவ வேண்டும் என சினிமா தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான JSK கோபி வலியுறுத்தியுள்ளார், பல கதாபாத்திரங்களில் மக்களை சிரிக்க வைத்த இவருக்கா இந்த நிலைமை இவருக்கு சக நடிகர்கள் உதவ வேண்டும் என பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *