கேரள உள்ளாட்சி தேர்தல் தாய் பாஜக சார்பிலும் மகன் கம்யூனிஸ்ட் சார்பிலும் போட்டி தாய் கொடுத்த பேட்டியால் பரபரப்பு !!

கேரள மாநிலம் பஞ்சவிலா தொகுதியைச் சேர்ந்தவர் சுதர்மா தேவராஜன். இவருடைய குடும்பம் நீண்ட நாட்களாக இந்துத்துவ கொள்கையையும் பாஜகவிற்கு ஆதரவாகவும் இருந்து வருகின்றனர். சுதர்மாவின் அப்பாவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர். கடந்த தேர்தலின் போது பாஜகவில் சேர்ந்த சுதர்மா உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெறும் 335 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

ஒரு வருடம் முன்பு பாஜகவின் பெண்கள் அமைப்பான மஹிலா மோர்ச்சாவின் மண்டல குழு உறுப்பினராக சுதர்மா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பாஜகவை சுதர்மா தனது பகுதியில் வலுப்படுத்தியுள்ளார், கேரளாவில் பாஜக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பாக கொல்லம் மாவட்டத்தில் இந்து அமைப்புகள் பாஜகவை வெற்றி பெறவைக்க களத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் சுதர்மா வெற்றியை தடுக்க நினைத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் அவரது சொந்த மகனையே அவரை எதிர்த்து போட்டியிட அழைத்து டிக்கெட் கொடுத்துள்ளனர், சுதர்மா மகன் பெயர் தினுராஜ் .

இதுபற்றி சுதர்மா கூறுகையில், ‘’என் மகன் இந்தமுறை தேர்தலில் போட்டியிடுவது தெரிந்தால் நான் பின்வாங்குவேன் என்று நினைத்து அவனை நிறுத்தியுள்ளனர். ஆனால், குடும்பம் வேறு, அரசியல் வேறு கேரளாவை குட்டி சுவராக்கும் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்த வேண்டும் அவர்களை வீழ்த்தினால்தான் மதமாற்றம் ஊழலை தடுக்க முடியும் தேர்தலில் போட்டியிடுவதால் நான் என் மகனுக்கு சாப்பாடு கொடுக்காமல் இருக்கப் போவதில்லை, அவனும் என்னை அம்மா என்று கூப்பிடாமல் இருக்கப்போவதில்லை.

தினுவின் அப்பா என்னுடன் ஒருநாள் பிரசாரத்தில் கலந்துகொண்டார். ஆனால் மகன் வருத்தப்படுவான் என்று அவரை என்னுடன் வரவேண்டாம் எனக் கூறிவிட்டேன்’’ என்று கூறுகிறார். மகனே என்றாலும் எங்கள் கொள்கைக்கு பிறகுதான் அனைத்தும் என சுதர்மா தெரிவித்துள்ளார், தாய் மகன் என இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுவதால் தற்போது இந்த பகுதியின் தேர்தல் முடிவை நாடே அதிகம் எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *