21 ம் தேதி தமிழகம் வருகிறார் அமிட்ஷா முக்கிய அறிவிப்பு வெளியாகிறது !

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா 2024 ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜகவை மீண்டும் ஆட்சி கட்டிலில் ஏற்ற 100 நாள் பயண திட்டத்தை தொடங்கியுள்ளார் இதன் மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்று பயணம் மேற்கொள்ளப்போகும் அவர் அந்த மாநிலங்ககளில் 2-4 நாட்கள் தங்கி பணியாற்ற போகிறார் இப்படி ஒரு அறிவிப்பு நேற்று வெளியானது.

இந்நிலையில் அதிமுக பாஜக இடையே அரசியல் உறவு மோசமடைந்து வருவதாகவும், காரியம் ஆகும்வரை பாஜக தயவை எதிர்பார்த்து காத்திருந்த அதிமுக தற்போது தேர்தல் நெருங்கிவிட்டதால் பாஜகவை எதிர்க்க தயாராகி வருவதாகவும் பாஜகவினர் பல்வேறு புகார்களை டெல்லி தலைமைக்கு அனுப்பினர், இந்த நிலையில் தமிழக அரசியல் களத்தை உன்னிப்பாக கவனித்த அமிட்ஷா தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆராய வருகிற 21 -ம் தேதி அன்று சென்னை வருகிறார்.

இந்நிலையில் பாஜக அதிமுக எனும் இரு கூட்டணி கட்சியினர் இடையே சுமுகமான உறவு இருப்பதாகவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மீது பாஜக எந்த அதிருப்தியும் அடையவில்லை எனவும் அதே நேரத்தில் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீது பாஜக வலுவான கொந்தளிப்பில் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திட்டமிட்டு அதிமுக பாஜக கூட்டணியை உடைக்க எடப்பாடி பழனிசாமி விரும்புவதாகவும், அதன் வெளிப்பாடாக பாஜக சார்பில் மேற்கொள்ளப்பட்ட வேலயாத்திரையை எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தடுத்தது மட்டுமல்லாமல், பாஜகவினர் நடத்தும் வேல் யாத்திரை அரசியல் யாத்திரை என DGP மூலமாக நீதிமன்றத்திலும் தமிழக அரசு தெரிவித்தது. இது பாஜக தலைமையை எரிச்சல் ஊட்டியது.

அதோடு நில்லாமல் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து விசாரணை நடைபெறும் என அறிவித்தது, ஆளுநர் 7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கும் முன்னரே தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்தது என எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் பாஜகவிற்கு சந்தேகத்தை கிளம்பியுள்ளன.

இதையடுத்து கூட்டணியின் நிலை குறித்து அறிந்து கொள்ள பாஜக மாநில தலைவர் முருகன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், துணை தலைவர் அண்ணாமலை ஆகியோர் முதலில் பன்னீர் செல்வத்தை சந்தித்தனர், அதன் பிறகு பழனிசாமியை சந்தித்தனர் இதையடுத்து டெல்லி தலைமைக்கு சில தகவல்கள் பகிரப்பட்டது அதன் தன்மையை அறிந்து கொள்ளவும், ஆளுநர் பன்வாரிலால் டெல்லி பயணத்தின் போது பிரதமர், துணை குடியரசு தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் அமிட்ஷா சென்னை வந்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்ய இருக்கும் நிலையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி கிடைத்தால் அது எடப்பாடிக்கு எதிராக அமையும் என்பதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டணியை முறிக்க முயல்வதாக டெல்லி தலைமை சந்தேகிக்கிறது எனவே அமிட்ஷா தமிழகம் வருகை தந்த பின்னர் அதிமுக பாஜக கூட்டணியில் மட்டுமல்லாமல் அதிமுக உட்கட்சியிலும் பல அரசியல் மாற்றங்கள் உண்டாகலாம் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *