சென்னையில் அமிட்ஷா முன்னிலையில் பாஜகவில் இணையும் முக்கிய பிரபலம் !!!

உள்துறை அமைச்சர் அமிட்ஷா வருகின்ற 21 ம் தேதி சனிக்கிழமை காலை தமிழகம் வர இருக்கிறார், தமிழகம் வரும் உள்துறை அமைச்சரை முதல்வர், துணை முதல்வர், பாஜக தலைவர்கள் சென்னை விமான நிலையத்தில் வரவேற்கின்றனர், உள்துறை அமைச்சர் அமிட்ஷா அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வருவதாக உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அமிட்ஷா வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி 7.5 % இட ஒதுக்கீடு விஷயத்தில் ஆளுநர் அனுமதி வழங்கும் முன்னரே அரசாணை வெளியிட்டது, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது.

பாஜக வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்தது மட்டுமல்லாமல், பாஜகவினர் மீது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கு பதிவு செய்தது, நீதிமன்றத்தில் பாஜக வேல் யாத்திரை ஆன்மீக யாத்திரை இல்லை எனவும் அரசியல் யாத்திரை எனவும் தமிழக DGP நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது ஆகியவற்றின் மூலம் பாஜகவிற்கு எடப்பாடி பழனிசாமி நெருக்கடி கொடுத்து வருகிறார்.

இது குறித்து மாநில தலைவர் முருகன் மாநில நிர்வாகிகள், பாஜக தமிழக பொறுப்பாளர்கள், கோர் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோருடன் அமிட்ஷா ஆலோசனை நடத்த இருக்கிறார், கூட்டத்தின் முடிவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சில முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் அதே நேரத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக முடிவுகள் எடுக்க வாய்ப்பில்லை எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வதுடன் பாஜக தலைமை நெருங்கலாம் எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முருகன் பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து முதல் முறையாக அமிட்ஷா தமிழகம் வர இருப்பதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மாநில பாஜக முடிவு செய்துள்ளது, அமிட்ஷாவின் தமிழக வருகையின் போது பல்வேறு மாற்று கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அமிட்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய இருக்கிறார்கள் எனவும்.

அதில் முக்கியமாக ரஜினியின் அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த மூன்று நபர்கள் பாஜகவில் இணைய இருப்பதாகவும், அதில் முக்கிய இளம் எழுத்தாளர் ஒருவரும் இருப்பதாகவும் இவர் சமூகவலைத்தளம் மூலம் திமுக மற்றும் தேசவிரோத சக்திகளுக்கு எதிராக வீடியோக்கள் வெளியிட்டு தமிழகத்தில் மாற்றத்தை உண்டாக்கியவர் என்று கூறப்படுகிறது.

இவர்கள் தவிர திமுகவை சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் இரண்டாம் கட்ட தலைவர்கள் பாஜகவில் இணையலாம் எனவும் இப்போதே பல்வேறு தகவல்கள் கமலாலயத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் எழுத்தாளர் தமிழகத்தில் அமிட்ஷா முன்னிலையில் இணைவதா அல்லது டெல்லி சென்று தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜகவில் இணையலாமா என பல்வேறு ஆலோசனைகள் அவர் தரப்பில் இன்னும் போய் கொண்டு உள்ளதால் பாஜகவில் இணைவது உறுதியானாலும் நாள் மட்டும் இன்னும் உறுதிசெய்யபடவில்லையாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *