தமிழக பாஜகவில் பாதிரியார்கள் இணைந்தது குறித்து அஸ்வத்தாமன் அதிரடி

தமிழகத்தில் மத நல்லிணக்கம் அதிகரித்து காணப்படுவது என்பதில் எந்த மாற்றமும் இல்லை இருப்பினும் ஒற்றுமையாக இருக்கும் மக்களை விமர்சனம் என்ற பெயரில் சில சினிமா திரைப்படங்கள் சர்ச்சையை உண்டாகின்றன என்பதில் எந்த மாற்றமும் இல்லை அப்படி மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் சில காட்சிகள் சர்ச்சையை உண்டாக்கியுள்ளன.

இதற்கு இந்து அமைப்புகள், கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன, இந்நிலையில் கிறிஸ்வர்கள் ஆட்சேபம் தெரிவித்த காட்சிகள் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டன ஆனால் இந்துக்கள் ஆட்சேபம் தெரிவித்த காட்சிகள் நீக்கப்படவில்லை இதற்கு கண்டனம் எழுந்த நிலையில் படக்குழு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இந்த நிலையில் பாஜக ஊடக.செய்தி தொடர்பாளர் அஸ்வத்தாமன் பட குழுவிற்கு கண்டனம் தெரிவித்தார், அப்போது சிலர் உங்களது பாஜகவில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பாதிரியார்கள் இணைந்தார்களே என்று கேள்வி எழுப்பினர் அதற்கு அஸ்வத்தாமன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-

சிலர் “ஆ… உங்கள் கட்சியில் கிருஸ்தவ பாதிரிகள் சேர்ந்துள்ளார்களே ” என கேட்கிறார்கள் .அட, அறிவிலிகளா ?! அன்பை போதித்த ஏசுவின் followers எங்கள் பக்கம் தான்…..
அடுத்த கடவுளை சாத்தான் என்று சொல்பவர்கள் தான் உங்கள் பக்கம்…..
சக மனிதனை மனிதனாக பார்க்கும்
கிருஸ்தவர்கள் எங்கள் பக்கம் தான் ….

சக மனிதனை மனிதனாக பார்க்காமல் மதமாற்றத்திற்கு உரிய பொருளாக பார்க்கும், இவனை எப்படா மதம் மாற்றுவது என அலையும் , நபர்கள் தான் உங்கள் பக்கம் இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பவர்கள் எங்கள் பக்கம் தான் ! இந்தியாவை கிருஸ்தவ நாடாக மாற்றி விடு ஏஷப்பா என்று கத்தி கதறி கோஷமிடுபவர்கள் உங்கள் பக்கம் !

born christian ஆக இருப்பார்கள், நாங்கள் கொடுத்த தீபாவளி பலகாரத்தை சாப்பிடுவார்கள் அவர்கள் எங்கள் பக்கம் தான் ! முந்தா நாள் மதம் மாறிட்டு இது சாத்தானுக்கு படைத்தது என மத வன்மம் பேசுபவர்கள் உங்க பக்கம்! இவ்வாறு அஸ்வத்தாமன் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *