தீபாவளி ஸ்பெஷல் ராகுலை விமர்சித்த ஒபாமா மோடி குறித்து சொன்னது என்ன தெரியுமா ?

ராகுல் காந்தி குறித்து முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியது காங்கிரசுக்கு தலைவலியாக மாறியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஒபாமா குறிப்பிட்ட கருத்துக்கள் வைரலாகி வருகின்றன.ஒபாமா மோடியை “இந்தியாவின் தலைமை சீர்திருத்தவாதி” என்று வர்ணித்தார். ஒபாமா 2015 இல் டைம் இதழில் ஒரு கட்டுரையில் மோடியை மேற்கோள் காட்டினார் .

தேயிலை விற்றவர் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை வழிநடத்துகிறார் என்றும், வறுமையிலிருந்து பிரதமர் பதவிக்கு அவர் பயணம் செய்வது இந்தியாவின் உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் ஒபாமா கூறினார்.
மோடியின் முக்கிய குறிக்கோள்கள் வறுமை ஒழிப்பு, சிறந்த கல்வி மற்றும் பெண்கள் அதிகாரம் என்பதாகும் என்று ஒபாமா கூறினார். மேலும், சுகாதாரத்துக்கான யோகா, ட்விட்டரின் செல்வாக்கு மற்றும் டிஜிட்டல் இந்தியாவின் யோசனை அவரை உலகப் புகழ்பெற்ற தலைவராக்கியது என்று ஒபாமா அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டார்.

மோடி குறித்து உயர்வாக பேசிய ஒபாமா காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தனது சுயசரிதை புத்தகத்தில் சாடியுள்ளார், அதாவது பக்குவமில்லாத அரசியல்வாதி ராகுல், எப்போதும் பதற்றத்துடன் காணப்படுவார், அரசியல் தெளிவு ஆர்வம் இல்லாதவர், ஆசிரியரிடம் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவரை போன்றவர் ராகுல் என ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பிரதமர் மோடி குறித்து ஒபாமா பேசியதும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் குறித்து ஒபாமா பேசிய கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் கடும் விவாத பொருளாக மாறியுள்ளன, குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள் ஒபாமா ராகுல் குறித்து எழுதிய கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஒபாமா தெரிவித்த கருத்துக்கள் இந்தியாவில் தீபாவளி ஸ்பெசல் அரசியல் விமர்சனமாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *