பிரபல நடிகர் நடத்தும் ட்ரஸ்ட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கொரோனா உறுதி! அதிர்ச்சி தகவல்

பிரபல நடிகர் நடத்தும் ட்ரஸ்ட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கொரோனா உறுதி! அதிர்ச்சி தகவல்

Loading...

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் அறியப்படும் ராகவா லாரன்ஸ் நடத்தும் டிரஸ்ட் ஒன்றில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 16,000 ஐ தாண்ட, சென்னையில் மட்டும் 11,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் சென்னையில் 500 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

இந்நிலையில் சென்னையில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தும் அறக்கட்டளையில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த ட்ரஸ்ட்டில் இருக்கும் 15 மாணவ மாணவிகளுக்கும், 3 பணியாளர்களுக்கும் 2 சமையல் காரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியானது மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ் பல்வேறு விதமான அறக்கட்டளைகளையும், ஆதரவற்றோர் இல்லங்களையும் நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அதிகளவில் நிதியளித்டஹ் நடிகராக அவர் உள்ளார்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*