1997 நம் விமானப்படை பாகிஸ்தான் தலைநகருக்குள் புகுந்து எப்படி திரும்பி வந்தது தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள் மெய் சிலிர்க்கும் வரலாறு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வழக்கம் போல பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.
65,000 அடிகள் மேலே ஒரு விமானம் சப்சானிக் வேகத்தில் இஸ்லாமாபாத் வான் பகுதியில் சத்தமில்லாமல் ஊடுருவியது. பாகிஸ்தான் ராடார்களால் 65,000அடி உயரத்தில் பறக்கும் விமானங்களை கண்டுபிடிக்க இயலாது.
Loading...
1997யில் எடுக்க பட்ட புகைபடம்
எனவே சத்தமின்றி ஊடுருவிய விமானமோ மிக முக்கியமான இடங்களை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தது. அது இந்திய விமானப்படையின் மிக்25ஆர் ரக விமானம் ஆகும் அது இடைமறித்தல் மற்றும் உளவு விமானம் ஆகும்.
அந்த விமானம் நாம் இயக்கியதிலேயே அதிவேகமாக செல்லும் திறன் கொண்ட விமானம் ஆகும், ஏன் இந்த பிராந்தியத்திலேயே அத்தகைய விமானம் நம்மை தவிர வேறு எந்த நாட்டிலும் அதற்கு முன்னரோ அல்லது பின்னரோ இருந்ததில்லை.
சத்தமின்றி வந்த வேலையை முடித்த பின்னர் விமானி சத்தமின்றி சென்றிருக்கலாம் ஆனால் பாகிஸ்தானியர்களை கொஞ்ச நேரம் ஓடவிட்டு வேடிக்கை பார்க்க எண்ணிய அவர் விமானத்தின் வேகத்தை சப்சானிக்கில் இருந்து சூப்பர்சானிக் வேகத்திற்கு விமானத்தை செலுத்தினார். அது மாக்2 வேகம் மணிக்கு 2470கிலோமீட்டர் வேகம்.
விமானம் ஒலியின் வேகத்தை மிஞ்சி ஒலித்தடையை உடைத்து ஒலியை விட அதிகமான வேகத்தை அடைந்தது.
அந்த சமயம் அமைதியான இஸ்லாமாபாத் வான்பரப்பில் பட பட வென இடி இடித்தது போல சப்தம் அதிர வைக்க இஸ்லாமாபாத் நகரமே மிரண்டு போனது.
பாகிஸ்தான் விமானப்படை பலத்த குழப்பதிற்கு பின் வந்திருப்பது இந்திய விமானப்படையின் மிக்25ஆர் ரக விமானம் என கண்டுபிடிக்க மிரண்டு போனது. தங்கள் தலைநகர் மீதே ஹாயாக பறந்த மிக்25 விமானத்தை எண்ணி கடுப்பாகியது.
இந்த குழப்பத்திற்கு இடையே சர்கோதா விமானப்படை தளத்தில் இருந்து சில எஃப்16 விமானங்களை பாக் விமானப்படை அனுப்பியது. ஆனால் பாவம் துளியளவும் அதில் பிரயோஜனம் இல்லை காரணம் எஃப்16 விமானங்களால் மிக்25ஆர் விமானத்தை நெருங்க கூட முடியாது. மேலும் எஃப்16 விமானத்தால் எட்டக்கூடிய அதிகப்பட்ச உயரம் 50,000 அடிகள் மட்டுமே ஆனால் நமது மிக்25ஆர் விமானம் 90,000அடிகள் உயரம் (27கிலோமீட்டர்) வரை பறக்கும் திறன் கொண்டது.
பாகிஸ்தான் விமானங்கள் விண்ணில் எழும்பி சர்கோதாவில் இருந்து இஸ்லாமாபாத் வருவதற்குள் நமது மிக்25 பாகிஸ்தானுக்கு தண்ணி காட்டி விட்டு இந்திய வான் எல்லைக்குள் நுழைந்திருந்தது. இந்த சம்பவம் பாக் ராணுவ வட்டாரங்களில் பலத்த அதிர்வுகளை உண்டு பண்ணியது.
நமது விமானம் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு ராணுவ தளத்தை எடுத்த புகைப்படத்தை இப்பதிவில் இணைத்துள்ளேன். 65,000அடிகள் உயரத்தில் இருந்து எடுத்த படம் எத்தனை தெளிவாக உள்ளது என பாருங்கள்.
இந்த விமானத்தின் திறன் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. காஷ்மீர் மீது இந்த விமானம் பறந்தால் கூட மேற்கு பக்கம் பாகிஸ்தான் அல்லது கிழக்கு பக்கம் சீன ஆக்கிரமிப்பு திபெத்தை அதனுடைய 1200mm கேமராவால் படம் எடுக்க முடியும்.
முதலில் சோவியத் ஒன்றியம் மட்டுமே இந்த விமானத்தை பயன்படுத்தி வந்தது. மேற்கு நாடுகள் கையில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக தனது நட்பு நாடுகளுக்கு கூட விற்கவில்லை ஆனால் ஒரு சோவியத் மிக்25விமானி தனது விமானத்துடன் ஜப்பானில் தரை இறங்கி அரசியல் அடைக்கலம் கோரினார்.
இந்த நிகழ்வால் சோவியத் ஒன்றியம் இந்த விமானங்கள் ஏற்றமதிக்கு தயார் என அறிவித்தது. அப்படி 1980ல் இந்தியாவுக்கு வழங்க தயார் என சோவியத் ஒன்றியம் கூறியதை அறிந்த அன்றைய விமானப்படை தளபதி இத்ரீஸ் லாத்திஃப் உடனடியாக அன்றைய பிரதமர் திருமதி இந்திரா காந்தியை தொலைபேசியில் அழைத்து பேசினார் உடனே அவரும் நீங்கள் வாங்குங்கள் என அனுமதி அளித்தார்.
அதன்படி 1981ஆம் ஆண்டு 8 மிக்25ஆர் விமானங்கள் வாங்கப்பட்டு இந்திய விமானப்படையின் 102ஆவது ஸ்க்வாட்ரன் அல்லது படையணியில் இணைக்கப்பட்டன.
இந்த படையணியின் புனைப்பெயர் “ட்ரைஸானிக்ஸ்” ஸ்க்வாட்ரன் ஆகும்.
இந்த படையணி உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இருந்து இயங்கியது.
2003ல் இந்த விமானங்கள் ஓய்வு பெற்றன.
அதையடுத்து 2011வரை இந்த படையணி செயல்படாமல் இருந்தது பின்னர் சுகோய்30 விமானங்கள் இணைக்கப்பட்டு தற்போது அஸ்ஸாம் மாநிலம் சாபூவா நகரில் சீனாவை கண்காணிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
இந்த விமானங்கள் இந்திய விமானப்படையில் இருந்த காலகட்டத்தில் பல்வேறு சாகச நடவடிக்கைகளை மேற்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.