ஒரே நாளில் 19 பேர் பலி… உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு- தமிழக நிலவரம்!

ஒரே நாளில் 19 பேர் பலி… உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு- தமிழக நிலவரம்!

Loading...

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 19 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் இந்தியாவில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு நேற்று வரை 25,000 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதிலும் தலைநகர் சென்னையில் மட்டும் 18,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1000 க்கு மேல் உள்ளது.

Loading...

இந்நிலையில் இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக பாதிக்கபப்ட்டவர்களின் எண்ணிக்கை 1458 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பலி எண்ணிக்கை இன்று 19 ஆக உள்ளது. இது தமிழக மக்களிடையே மிகப்பெரிய பீதியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு மேலாக் ஊரடங்கு அறிவிக்கப்பட்டும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*