Connect with us

சினிமா

பருத்திவீரனுக்கு இன்று 14 ஆவது பிறந்தநாள் – ரசிகர்கள் கொண்டாட்டம் !

பருத்திவீரனுக்கு இன்று 14 ஆவது பிறந்தநாள் – ரசிகர்கள் கொண்டாட்டம் !

பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி இன்றோடு 13 ஆண்டுகள் முடிந்துள்ளதை அடுத்து கார்த்தியின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் சினிமா என்றால் அதற்கு பொருத்தமான சினிமாவாக பருத்திவீரனை கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம். தன் சினிமா வாழ்க்கை முழுவதும் கிராமியப் படங்களால் ரசிகர்களை கட்டிப்போட்ட இயக்குனர் பாரதிராஜா, ‘இந்த படத்தை போல ஒரு படத்தை நான் எடுக்கவில்லையே என வெட்கப்படுகிறேன்’ எனக் கூறினார் என்பதே அந்த படத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.

Loading...

முதலில் சூர்யாவுக்கு சொல்லப்பட்ட இந்த கதை பின்னர் அவரது தம்பி கார்த்திக்கு மாறியது அனைவரும் அறிந்ததே. அமெரிக்காவில் படித்த மாடர்ன் பையனான கார்த்தியை பருத்தி வீரனாக மாற்றி 23 பிப்ரவரி 2007 ஆம் ஆண்டு நம் கைகளில் கொடுத்தார் இயக்குனர் அமீர். சிவாஜிக்கு பராசகக்தி படத்தின் மூலம் கிடைத்த புகழைப் போல கார்த்திக்கு இந்த படத்தில் ரசிகர்கள் மனதில் இடம் கிடைத்தது என்றால் அது மிகையில்லை.

Loading...

அந்த படத்துக்குப் பின்னர் கார்த்திக்கும் இயக்குனர் அமீருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்ட நிலையில் இன்று அந்த படத்தினை அவர்கள் இருவருமே கண்டுகொள்ளாத நிலையில் மறக்காத ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அதைக் கொண்டாடி வருகின்றனர்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending