அதிர்ச்சி தமிழகத்தில் ஊரடங்கு எத்தனை நாள் நீட்டிக்கப்படுகிறது தெரியுமா?

சென்னை :- கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக இந்தியா முழுமைக்கும் ஏப்ரல் 14 ம் தேதிவரை முழுமையான ஊரடங்கு முறையை அறிவித்து உத்தரவு பிறப்பித்தார் பிரதமர் மோடி, இதனையடுத்து மாநில அரசுகள் தங்கள் பகுதிகளுக்கு ஏற்றார் போல் ஊரடங்கு முறையில் பொருள்களை வாங்க அத்தியாவசிய பொருள்களை பெற நேர இடைவெளியை கடைபிடிக்கின்றன.

Loading...

தமிழகத்தில் காலை 6 மணிமுதல் 1 மணிவரை மட்டுமே அத்தியாவசிய பொருள்களை வாங்க வெளியே வர நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் வருகிற 14 ம் தேதியுடன் ஊரடங்கு முறை விலக்கிக்கொள்ளப்படுமா இல்லை நீட்டிக்க படுமா என்ற கேள்வி மக்களுக்கு எழுந்துள்ளது தற்போது அதற்கு ஒரு விடை கிடைத்துள்ளது.

அண்டை மாநிலமான தெலுங்கானாவில் தப்லீக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றவர்களால் கொரோனா நோயாளிகள் அதிக அளவில் கண்டறியப்பட்டனர், அவர்கள் மூலம் மாநிலத்தின் பல பகுதிகளில் கொரோனா தொற்று பரவி இருக்கும் என அஞ்சப்படுகிறது, இதனையடுத்து தற்போது அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தற்போதைய ஊரடங்கு முறையை மேலும் இரண்டு வாரங்கள் அதாவது ஏப்ரல் 30- ம் தேதி வரை நீட்டிக்க இருப்பதாக கூறியுள்ளார்.

Loading...

தெலுங்கானா மாநிலத்தை விட தமிழகத்தில் பாதிப்புகள் அதிகம் மேலும் தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களும் அதிகம் எனவே கண்டிப்பாக மேலும் 15- 20நாட்களுக்கு குறையாமல் தமிழகத்தில் ஊரடங்கு முறை நீட்டிக்கப்படும் என்று தற்போது தெரியவந்துள்ளது, தமிழகத்தில் ஊரடங்கு முறையை விலக்கி கொள்வது குறித்து தற்போதுவரை அரசு எந்த முடிவையும் எடுக்காத பட்சத்தில் ஊரடங்கு முறை நீட்டிக்க வாய்ப்புகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

கொரோனா அபாயம் மூன்றாம் கட்டத்தை எட்டியதாக தமிழகத்தில் அறிவிக்கப்பட்டால் ஊரடங்கு முறை மேலும் 30 நாட்களுக்கு கண்டிப்பாக நீட்டிக்கப்படும் எனவும், வருகிற 9 ம் தேதி பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் எடுக்கவுள்ள ராபிட் டெஸ்ட் மூலம் சமூக பரவல் உண்டானதா என்பதை அறிந்து இந்த திட்டம் செய்லபடுத்த படும் என்றும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஏப்ரல் 12-ம் தேதிக்கு முன்னர் முழுமையான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரியவந்துள்ளது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*