Connect with us

#24 Exclusive

120 கோடி ரூபாய் வருகை,.. நெல்லை கண்ணனுக்கு கிடைத்தது எவ்வளவு?, அமலாக்க துறை தகவலால் சிக்கல்

2018 ம் ஆண்டு முதல் PFI எனப்படும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு 120 கோடி ரூபாய் அளவிற்கு பணம் வந்துள்ளதாக அமலாக்க துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன, இதில் 73 கணக்குகள் மூலம் பணம் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை தூண்டவும் சமீபத்தில் இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட CAA – விற்கு எதிரான போராட்டத்தை தூண்ட இந்த அமைப்பு உதவியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியா பாரளுமன்ற CAA எனப்படும் குடியுரிமை சட்டத்தில் சில திருத்தங்களை செய்து சட்டம் கொண்டுவந்தது, இந்த சட்டத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன, மத்திய அரசு இது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான சட்டமில்லை என விளக்கம் கொடுத்த பிறகும் போராட்டங்கள் கலவரங்கள் அரங்கேறி வருகின்றன.

சமீபத்தில் அதிமுக எம் பி ரவீந்திரநாத் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, குடியுரிமை சட்டம் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம் செய்தவர்கள் தாக்கப்படுகிறார்கள், திருச்சியில் நடைபெற்ற பாஜக நிர்வாகி ரகு கொலை CAA விற்கு எதிராக விழிப்புணர்வு செய்ததால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களுக்கு இந்த பணம் பயன்பட்டிருக்கலாம் என குற்றசாட்டுகள் முன்வைக்க படுகின்றன.

Loading...

இந்நிலையில் சமீபத்தில் SDPI அமைப்பு நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட நெல்லை கண்ணன் பிரதமர் மோடி, அமிட்ஷா சோலியை முடிக்க வேண்டும் என பேசி கொந்தளிப்பை ஏற்படுத்தினார், சாதாரண கச்சேரிகளில் பேசுவதற்கே பணம் வாங்கி கொண்டு பேசும் நெல்லை கண்ணன், பிரதமர் குறித்து சர்ச்சையாக பேசுவதற்கும், பயங்கரவாதத்தை தூண்டி விடுவதற்கும் எவ்வளவு பணம் பெற்றார் என்று விசாரணை நடத்தவேண்டும் என்றும்..,

Loading...

நெல்லை கண்ணனின் வங்கி கணக்குகளை ஆராய்ந்து அவருக்கும் முறைகேடாக பணம் வந்துள்ளதா என விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஓ அதுதான் நீதிமன்றத்தில் அத்தனை வக்கீல்கள் ஆஜர் ஆனார்களா?

Loading...

Trending