மறக்க முடியுமா இந்த நாளை ? – சச்சின் படைத்த வரலாற்றுச் சாதனை !

மறக்க முடியுமா இந்த நாளை ? – சச்சின் படைத்த வரலாற்றுச் சாதனை !

ஒருநாள் போட்டிகளில் முதன்முதலாக சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்து இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

தான் விளையாடிய காலத்தில் சச்சின் டெண்டுல்கர் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள், சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள் என அவரது சாதனைகளைப் பட்டியலிட்டால் வாய் வலிக்கும். இந்நிலையில் அவர் ஒருநாள் போட்டிகளில் ஒரு முக்கியமான சாதனையை நிகழ்த்தி இன்றோடு 10 ஆண்டுகள் முடிவடைகின்றன.

கடந்த 2010ம் ஆண்டு குவாலியரில் பிப்ரவரி 24ம் தேதியன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 147 பந்துகளில் 200 ரன்களை அடித்தார். இதில் 25 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடக்கம். ஒருநாள் போட்டிகள் ஆரம்பித்து கிட்டத்தட்ட 39 வருடங்களுக்குப் பிறகு இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார். சச்சினை விட அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் பல சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி உள்ளனர். ஆனால் அவர்களால் கூட நிகழ்த்த முடியாத இந்த சாதனையை சச்சின் தனது 36வது வயதில் நிகழ்த்தினார்.

Loading...

அதன் பிறகு இப்போது வரை பல பேர் இரட்டை சதங்களை அடித்த இருந்தாலும் சச்சினின் அந்த இன்னிங்ஸ் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தைப் பெற்றுள்ளது.

Loading...
Loading...

24 Cinema

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *