Connect with us

Uncategorized

1000 அப்பாவி பயணிகள் உயிர் பெரிதா 300 கலவரக்காரர்கள் உயிர் பெரிதா பறக்கவிட்ட ரயில் ஓட்டுநர் வைரலாகும் வீடியோ

குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன, இஸ்லாமிய பல்கலைக்கழகங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன, குறிப்பாக பங்களாதேஷ் நாட்டில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் கூட சட்டவிரோதமாக இந்திய சொத்துக்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் அமைதியாக வேடிக்கை பார்த்த மேற்கு வங்க முதல்வருக்கு மத்திய அரசு பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்தது, மேலும் கலவரத்தின் மூலம் இந்திய மக்கள் பாதிக்கப்படும் சூழலில் இதனை முடிவிற்கு கொண்டுவர மத்திய அரசு கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க உத்தரவிட்டது. இதன் எதிரொலியாக இரவோடு இரவாக துணை இராணுவ படையினர் கலவரக்காரர்களை ஒடுக்கினர் அசாம் மாநிலத்தில் கலவரம் தற்போது சீரடைந்து வருவதாக அம்மாநில காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் போராட்ட காரர்கள் தொடர்ந்து ரயில்களை எரிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர், குறிப்பாக பயணிகள் ரயிலை குறிவைத்து நிறுத்தி அதனை தீவைத்து கொளுத்தும் நடவடிக்கையில் கலவரக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர், மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு பயணிகள் கலவரக்காரர்களால் தாக்கப்பட்டு வருகின்றனர், சிறு குழந்தை தலையில் கல்லடி பட்டு ரத்தம் சொட்டிய சம்பவங்களும் அரங்கேறியிருந்தன.

Loading...

இந்த சூழலில்தான் 1000 மேற்பட்ட பயணிகளுடன் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலை போராட்ட காரர்கள் சுமார் 300 – க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் சூழ்ந்து கொண்டு தாக்கி தீ வைத்து கொழுத்த முற்பட்டனர் ஆனால் ரயிலை இயக்கி வந்த ஓட்டுநர் எதற்கும் அசராமல் அதிரடியாக ரயிலை மின்னல் வேகத்தில் இயக்கினார் இதனால் ரயிலை மறிக்க தண்டவாளத்திற்கு இடையில் நின்ற கலவரக்காரர்கள் தெறித்து ஓடினர். இதனால் அதிர்ஷ்ட வசமாக பயணம் செய்தவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Loading...

தற்போது இந்த வீடியோ இணையத்தில் கடும் வைரலாக பரவி வருகிறது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending