Connect with us

அரசியல்

பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்… சிறுமியை கொன்றால் 10 லட்சம் – ஸ்ரீராம் சேனா அமைப்பு !

பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்… சிறுமியை கொன்றால் 10 லட்சம் – ஸ்ரீராம் சேனா அமைப்பு !

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என பொது மேடையில் கோஷமிட்ட சிறுமியை சுட்டுக்கொன்றால் 10 லட்சம் பரிசு அறிவித்திருக்கிறது ஸ்ரீராம் சேனா அமைப்பு

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒவைசி கட்சியின் சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது, அதில் அமுல்யா லியோனி என்ற பெண் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேசி கொண்டிருந்தார், திடீர் என பாக்கிஸ்தான் ஜிந்தாபாத் ஜிந்தாபாத் என கோஷம் போட ஒட்டுமொத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

Loading...

உடனடியாக தடுத்து அவரை வெளியேற்றினர், பின்பு காவல்துறை அவரை கைது செய்து தேசத்துரோக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர், இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அவரது தந்தை லியோனியை அவரது உறவினர்கள் உடன் சிலர் சென்று, கேட்டதில் அவர் கூறிய தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

பாக்கிஸ்தான் கோஷம் போட்டது மிக பெரிய தவறு எனவும், முஸ்லிம்களுடன் சேர்ந்து போராட்டம் செல்லும்போதே கண்டித்ததாகவும் ஆனால் அவள் கேட்கவில்லை, இதன் பின்னணியில் அடையாளம் தெரியாத ஒரு இளைஞன் இருப்பதாகவும் கூறியுள்ளார், மேலும் தான் அவளை ஜாமினில் எடுக்க போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விஷயத்தை மேலும் சிக்கலாக்கும் விதமாக ஸ்ரீராம் சேனா எனும் அமைப்பைச் சேர்ந்த சஞ்சீவ் மராதி ’அமுல்யாவைக் கொன்றால் 10 லட்சம் பரிசளிக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் காவல்துறை அவரை வெளியில் விட்டால் கொலை செய்துவிடுவேன்’ என மிரட்டும் விதமாகப் பேசியுள்ளார். காவல்துறை சட்டப்பூர்வமான நடவடிக்கையினை எடுத்து வரும் வேளையில் வன்முறையை தூண்டும் விதமாக அமைப்பு செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending