10 ம் வகுப்பு பொது தேர்வில் அதிரடி மாற்றம் மாணவர்கள் இனி ஒரே தேர்வு கிடையாது?

10 ம் வகுப்பு பொது தேர்வில் அதிரடி மாற்றம் மாணவர்கள் இனி ஒரே தேர்வு கிடையாது?

Loading...

கொரோனா தாக்கம் வருகின்ற வாரத்தில் மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படும் நிலையில் விரைவில் 10 வகுப்பு பொது தேர்வில் மாற்றம் கொண்டுவரப்படலாம் எனவும் அதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

கொரோனா எதிரொலியாக மாநில அளவிலான பொதுத்தேர்வு திட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட அளவிலான தேர்வை நடத்த கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாகவும் அது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading...

முன்பு மார்ச் 26-ஆம் தேதி தொடங்கவிருந்த பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது இந்நிலையில் ஏப்ரல்10ஆம் தேதிக்கு முன்னாடி கொரோனா தாக்கம் கட்டுக்குள் வராவிட்டால், புதிய திட்டத்தை அரசு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்தால், காலாண்டு, அரையாண்டு முடிவுகளின் படி தேர்ச்சி அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன சமூக பரவலை தடுக்கும் விதமாக, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த முடிவினை அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா பயத்தில் பல மாணவர்கள் வீடுகளில் மூழ்கியுள்ள நிலையில் தற்போது தேர்வு குறித்த அச்சத்தை போக்க கல்வித்துறை இந்த முடிவினை எடுத்திருக்கலாம் எனவும் விரைவில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்க படுகிறது, தற்போதைய சூழலில் மாநில பொது தேர்விற்கு பதில் மாவட்ட அளவிலான தேர்வுகள் நடைபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*