வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி!! இது தொடர்பான புகைப்படம் வைரல்..!!!!!

வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி!! இது தொடர்பான புகைப்படம் வைரல்..!!!!!

Loading...

கடந்த 15 ஆம் தேதியில் இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன தரப்பு வீரர்கள் இவருக்கும் இடையே இரு நாட்டு ராணுவ வீரர்கள் ஆவேசமாக மோதிக்கொண்டனர், இந்த மோதலில் சீன ராணுவ வீரர்கள் இரும்புத் தடி மற்றும் இரும்புக் கம்பி மற்றும் கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில்,இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்,

இந்த தாக்குதலில் சீனாவிற்கு இந்தியா கொடுத்த பதிலடியில் சீனா இராணுவர்கள் 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் காணாமல் போயிருக்கலாம் என்று இந்தியா ராணுவ தரப்பில் சந்தேகம் எழுந்து இருந்தது, பின்னர் இரு நாடுகளுக்கு நடந்த மோதலில் இந்தியா இராணுவ வீரர்கள் மாயமாகவில்லை என்று இந்தியா சார்பில் தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

Loading...

எல்லைப் பகுதிகளில் இரு நாடுகளுக்கு நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த 20 இந்தியா இராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றன. மற்றும் வீர மரணம் அடைந்த இராணுவத்தின் உடலை வீரர்களின் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்தனர், இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, கண்ணீர் அஞ்சலி செலுத்தி பிரியாவிடை அளித்தனர், மற்றும் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் நான் ஒரு அரசியலாக பேசவில்லை முன்னாள் ராணுவத்தினராக செல்லுகிறேன் இந்திய வீரர் ஒருவர் போரில் கொல்லப்பட்டால் எதிரி படையில் மூவரை கொல்லுமாறு ஒவ்வொரு ராணுவ வீரருக்கு மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார், இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*