மாற்று திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு !

மாற்று திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு !

Loading...

பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில், மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பான அறிவிக்கையை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை இருக்கைகள், அடையாளங்கள், அவர்களது கைத்தடி உள்ளிட்ட உபகரணங்களை பாதுகாப்பாக வைப்பது, கைப்பிடிகள் அமைப்பது, முன்னுரிமை இருக்கைகளை அவர்களின் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ளும் ஏற்பாடுகளை பொருத்துதல், சக்கர நாற்காலிகளுக்கான ஏற்பாடுகள் ஆகிய வசதிகளை ஏற்படுத்த இந்த சட்டத் திருத்தம் வகை செய்கிறது.

Loading...

மாற்றுத் திறனாளிகள், நடக்கும் திறன் குறைந்த பயணியர் ஆகியோருக்கான இந்த வசதிகள் உள்ளனவா இல்லையா என்பது பற்றி பேருந்துகளின் தகுதி ஆய்வின்போது உறுதி செய்யப்படும்.
2020 மார்ச் 1-ஆம் தேதி முதல் இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வரும்.
 மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ல் கொண்டுவரப்படவுள்ள திருத்தப்பட்ட வரைவு விதிகள் 2019 ஜுலை 24-ஆம் தேதியிட்ட அறிவிக்கை எண் ஜி.எஸ்.ஆர். 523(E)-ல் வெளியிடப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்த எதிர்ப்புகள்,  ஆலோசனைகள் ஆகியவை குறித்து, உரிய வகையில் பரிசீலனை செய்தபின், இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3886 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*