பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் லாஸ்லியாவிற்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

பிக் பாஸ் மூன்றாவது சீசனில் அதிகமாக பிரபலமடைந்தது லாஸ்லியாதான்.இலங்கையை சேர்ந்த பெண்ணான இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற நாள் முதலே மக்கள் மனதில் இடம்பிடித்தார்.குறிப்பாக இளைஞர்கள் மனதை அதிகம் கவர்ந்தது இவர்தான்.

Loading...

இவருக்காக லாஸ்லியா ஆர்மி என்ற பெயரில் ஒரு இளைஞர் பட்டாளமே ஒன்று சேர்ந்தது அந்த அளவிற்கு அமோக வரவேற்புடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் லாஸ்லியா

முதலில் ரசிகர்கள் கூட்டம் ஆர்ப்பரித்தாலும், அவரது செயல்பாடுகளால் வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தார்.பின்னர் கவினுடன் காதல் வலையில் விழுந்த லாஸ்லியா செய்த சில செயல்கள் மக்கள் மத்தியில் வெறுப்பை உருவாக்கியது

Loading...

இருப்பினும் அவர் வெளியே வந்ததும் நிச்சயம் சினிமாவில் வாய்ப்பு காத்திருக்கிறது என பலரும் கூறிவருகின்றனர்.

இதே நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூட, உங்களுக்காக திரையுலகம் வாய்ப்பு தர காத்துக்கொண்டிருக்கிறது இவ்வளவுதான் நான் இப்போதைக்கு கூறுவேன். இப்போது வேண்டுமானால் நீங்கள் லாஸ்லியா வாக இருக்கலாம் ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கலாம் வரும்போது கெயின்லியாவாக (gainலியா)வெளியே வருவீர்கள் என்று கூறினார்.

இந்நிலையில் ராஜா ராணி சீரியலின் இயக்குனரான பிரவின் அளித்த பேட்டியில், பிக்பாஸ் முடிந்ததும் ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகம் எடுக்கவிருப்பதாகவும், அதில் லொஸ்லியா நிச்சயம் இடம்பெற்றிருப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.ஆக பிக்பாஸ் முடிந்ததும் லொஸ்லியா நட்சத்திரமாக ஜொலிக்கவிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*