நடிகை சாயிஷா கர்ப்பமான செய்தி உண்மையா?? பொய்யா?? இதோ….!!!

நடிகை சாயிஷா கர்ப்பமான செய்தி உண்மையா?? பொய்யா?? இதோ….!!!

Loading...

நடிகை சாயிஷா இந்தியா திரைப்பட நடிகை ஆவார். இவர் சினிமா துறையில் தெலுங்கு படமான அகில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார், அதனை தொடர்ந்து ஹிந்தி படமான சிவாய் படத்தில் நடித்து உள்ளார். பின்பு இவர் தமிழ் படத்தில் நடிக்க ஆர்வம் இருந்ததால் தன் முழுக்கவனத்தையும் தமிழ் சினிமாவில் திசை திருப்பினார்.

இவர் தமிழ் திரைப்படமான நடிகர் ரவியுடன் இணைந்து நடித்த முதல் படம் வனமகன் ஆகும். மற்றும் அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியுடன் ஜூங்கா மற்றும் கார்த்திக்கு ஜோடியாக கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களின் மூலம் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தினர், அதனை தொடர்ந்து அதிக பட வாய்ப்புகள் குவிந்தன.

Loading...


சமீபத்தில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நகைச்சுவை, மற்றும் காதல் இரண்டையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமான கஜினிகாந்த் . இப்படத்தின் மூலம் இவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர், பின்பு நடிகை சாயிஷா திருமணத்திற்கு பிறகும் பட வாய்ப்புகளில் நடித்து வருகின்றன,

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து டெடி படத்திலும் நடித்து வருகின்றன, அதுமட்டும் இல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு மூலம் சினிமா துறையில் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், அவ்வப்போது சமூக வலைத்தளங்களில்

ரசிகர்களை கவரும் வகையில் குக்கிங்க் வீடியோ, டான்ஸ் வீடியோ, டிக் டாக் வீடியோ, ஆர்யா- சாயிஷா ரொமான்ஸ் வீடியோ போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றன, இந்நிலையில் நடிகை சாயிஷா கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி பரவி வரும் நிலையில் அவருடைய தாயார், இதற்கான பதில் ஒன்றை கூறியுள்ளார். இது முழுக்க பொய்யான வதந்தி என்று மறுத்துள்ளார். இவை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது..

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*