திமுகவின் தேர்தல் அறிக்கையை ஆணி அறைந்து வீட்டு வாசலில் மாட்டி செல்லும் இளைஞர்கள். நடக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகம்.

Loading...

இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி கட்சிகள் மிக பெரிய வெற்றி அடைந்த போதிலும் தமிழகத்தில் தேனி தொகுதியை தவிர மற்ற இடங்களில் தோல்வி அடைந்தது. இதற்கு காரணமாக மோடி மீது தமிழக மக்கள் அதிருப்தியில் இருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

ஆனால் தமிழகத்தை சேர்ந்த பலர் இதனை சொன்னாலும் உண்மையில் தமிழகத்தில் திமுக கொடுத்த பொய்யான தேர்தல் வாக்குறுதிகளும் மிக பெரிய காரணம் என்று சிலர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 5 பவுனுக்கு கீழ் அடகுவைத்துள்ள நகை கடனை தள்ளுபடி செய்வதாக ஸ்டாலின் கூறியது, நடுத்தர, ஏழை மக்கள் இடையே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக கருதுகின்றனர்.

Loading...

மேலும் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தது, மாதம் 6000 ரூபாய் என்று நடைமுறைக்கே சாத்தியம் இல்லாத பொய்யான வாக்குறுதிகளை அளித்தது. இந்த தேர்தலில் மக்கள் மனங்களை அதிகம் மாற்றியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதனை மெய்ப்பிக்கும் விதமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த 5 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து திமுகவின் முக்கிய வாக்குறுதியை பிரிண்ட் செய்து வீட்டு வாசல், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அருகில் ஆணி அறைந்து மாட்டி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கூடவே எப்படியும் சிவகங்கை தொகுதியில் இடைத்தேர்தல் வரும் அதுவரை திமுக அளித்த நகை கடன் தள்ளுபடி, பயிர்க்கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து இது மூன்றில் ஏதேனும் ஒன்று நிறைவேற்றப்பட்டால் நீங்கள் திமுக கூட்டணிக்கே வாக்களியுங்கள் இல்லை என்றால் உங்களுக்கு பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றிய திமுகவினரை உள்ளே அனுமதிக்காதீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இளைஞர்களின் இந்த செயல் திமுகவினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேலை இதை மக்கள் நம்பி நம்மை எப்போது நகை கடனைத்தள்ளுபடி பண்ணுவீர்கள் என்று கேட்டால் என்னாவது நமது நிலைமை என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்களாம்.

இதே போல் தமிழகம் முழுவதும் நடந்தால் திமுக நிலமை?

©TNNEWS24

Loading...
About Tnnews24 2640 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*