Connect with us

#24 Exclusive

‘தலைவர் 168’ படத்தின் அட்டகாசமான டைட்டில் இதுதான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டது

இந்த படத்திற்கு ஏற்கனவே எதிர்பார்த்தது போலவே ’அண்ணாத்த’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த புதிய போஸ்டர் மற்றும் வீடியோவையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த ஸ்டில்லில் விசில் அடித்துக் கொண்டு அட்டகாசமாக ஸ்டைலிஸ் தோற்றத்தில் இருப்பது ரஜினி ரசிகர்கள் உட்பட அனைவரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Loading...

ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறா.ர் டி இமான் இசையில் உருவாகி வரும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending