இனி வழிபாட்டு தலங்களில் இவையெல்லாம் கிடையாது ?? இதோ புதிய நெறிமுறைகள் !!!!!

கொரோன வைரஸ் காரணமாக கடந்த மாதம் மார்ச் முதல் ஜூன் 30 தேதி வரை மக்களின் நலனுக்காக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாக மாறிவிட்டனர், இந்நிலையில் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்ட நிலையில் மத்திய அரசு ஜூன் 8-ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் ஒட்டல்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள், மற்றும் சினிமா ஹால்கள்,வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு .

Loading...

பொது மக்கள் கொஞ்ச கொஞ்சமாக தங்களுடைய வாழ்க்கை முறைக்கு மாறி கொண்டு இருக்கிறார்கள், இந்நிலையில் கோவில்கள் மற்றும் தேவாலயங்கள், மசூதிகள் போன்றவைகள் ஒரு சில பகுதிகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டாலும் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக சிலவழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துகிறது. அவை

10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் போன்றவர்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்வதை தவிக்க வேண்டும். பின்பு கோவில்களில் எந்த சிலைகளையும் தொடக்கூடாது என்றும், வழிபாட்டு தலங்களுக்கு உள்ளே பிரசாதம் மற்றும் புனித நீர் தெளிக்கப்படக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Loading...

ஷாப்பிங் மால்கள் செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். ஓட்டல்களில் தனிமனித இடைவெளியுடன் 50 சதவீத அளவிற்கு வாடிக்கையாளர்களை அமர்ந்து சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்றும், பின்பு ஒரு முறை மட்டும் முகக்கவசம் மற்றும் கையுறைகள் பயன்படுத்த வேண்டும் என்றும், மக்கள் அதிகம் கூடும் சினிமா ஹால்கள் மற்றும் விளையாட்டு அரங்குகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தவும் அதற்கான தடை தொடர்கிறது எனவும் மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*