இனி ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு கவலை வேண்டாம்!!

பொதுவாக பெண்கள் பலருக்கு முகத்தில் எண்ணெய் வடிவது போன்ற முகம் தோற்றம் காணப்படும். இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் ஹார்மோன்களின் காரணமாக முகத்தில் எண்ணெய் வழியும், இவை பலரும் விரும்பமாட்டார்கள். இதற்காக

Loading...

விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட்கள் வாங்கி உபயோகிப்பதன் மூலம் முகத்தில் எந்த ஒரு மாற்றம் தெரியாது போல் இருக்கும். இவை சரி செய்ய வீட்டில் இருந்தபடியே மிக குறைவான செலவில் இயற்கை முறையில் பயன்படுத்தலாம்.

முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சனை உள்ளவர்கள் முதலில் குறைந்ததது 7 முறையாவது தினமும் முகத்தை கழுவி கொண்டே இருக்க வேண்டும். வெளியில் சென்று வந்தபிறகு முகத்தை சுத்தமான நீரில் கழுவி மெல்லிய துணியை கொண்டு நன் றாக துடைத்து உலர விடுங்கள்.

Loading...

இரவு நேரங்களிலும் எந்தவிதமான க்ரீம்களையும் பயன்படுத்தாதீர்கள். படுப்பதற்கு முன்பும் மீண்டும் ஒரு முறை சுத்தமான நீரில் முகத்தை நன்கு கழுவுங்கள். மற்றும் எண்ணெய் செய்த உணவுகளை முற்றிலும் தவிர்த்து கொள்வது நல்லது. வாரத்தில் ஒரு முறையாவது ஏதாவது ஒரு பேஷியல் செய்யுங்கள்.

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் குளித்து முடித்து, முகத்திற்கு மேக்-கப் செய்யும் முன், சிறிது எலுமிச்சை சாற்றை முகத்திற்கு தடவி, 10 நிமிடம் கழித்து, மேக் கப் செய்ய வேண்டும் அப்போது முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை நீங்கும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் பொலிவான தோற்றத்தை பெறுவீர்கள்.

நம் வீட்டில் உபயோகிக்க பயன்படுத்தபடும் ஒரு கப் அரிசி மாவு மற்றும் எலுமிச்சை சாறு அதனுடன் பழுத்த பப்பாளி பழம் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்து 10-15 நிமிடம் மசாஜ் செய்த பிறகு
குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் முல்தானி மெட்டி மற்றும் அதனுடன் மஞ்சள் சந்தானம் ரோஸ் வாட்டர் போன்றவை சேர்த்து வாரம் ஒரு முறை முகத்துக்கு ஃபேஸ் மாஸ்க் போட் டு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். இவை சருமத்தில் எண்ணெய் பசையை உடனடியாக நீக்க உதவும்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*